Thursday, August 25, 2011

வெப்பம் !!!



இங்கு நான் வெப்பத்தால் உறுகவில்லை...
உன்னை நினைத்துதான் உருகினேன்....
என் காதல் எனும் ஜோதியை ஏந்தி நிற்கிறேன்...
அணையும் முன் வருவாயா...!!!!

இப்படிக்கு,

மெழுகுவர்த்தி

Tuesday, August 23, 2011

எது சிறந்தது ???



கரிசல் மண் மேடையில்..
பச்சை புற்களின் பார்வையில்..
நடக்குதுமா ஒரு பட்டிமன்றம்..
எது சிறந்தது???
குடையா...இல்லை செருப்பா...
நடுவராய் நிற்கிறான்
சின்ன சாலமன் பாப்பையா....


Monday, August 22, 2011

மணி ஆறு !!!



என்றும் எல்லோருக்கும் நேரம் காட்டும் நான்
எப்போதும் ஓடி கொண்டிருப்பதால் ஒய்வு எடுத்தேன்...
சில மணித்துளிகள் கழித்து நேரம் தெரிவில்லை எனக்கு...
என்னை சரிப்படுத்த துணையாய் நின்றாள் மலர்த்தோழி...
அவள் காதலனான சூரியன் மறைவால் வாடிய முகத்தை கண்டு
உணர்ந்தேன் மணி ஆறு...

இப்படிக்கு,
கடிகாரம்

Wednesday, August 17, 2011

என் கை பிடித்தவன் !!!



இந்த படத்தை பார்த்தவுடன் தோன்றிய சில வரிகள்...


பேச முடியாத பெண் சொல்ல துடித்த வார்த்தைகள் இதோ -

கல்யாண சந்தை என்னும் குளத்தில்
என்னை பார்க்க வந்தவர்கள் அனைவரும் பேசினார்கள்...
என்னால் கேட்கமட்டும்தான் முடியும் என்று தெரிந்தவுடன்...
கடிதம் போடுவதாக கூறி காணாமல் போனவர்கள்...
நீ மட்டும் தான் என் மௌனத்தின் அர்த்தம் புரிந்து
என் கை பிடித்தவன்...
இனி நீ என் கணவனாய்...கடவுளாய்... தோழனாய்...
நான் பேச போகும் மொழியாய்....
இனி அழ தேவையில்லை என்பதால்
சிந்துகிறேன் சில துளிகளையும் ஆனந்தமாய் !!!

Wednesday, August 10, 2011

மனிதம் வளர்ப்போம்!!!



"மனிதம் வளர்ப்போம்" என்ற தலைப்பில் பேசி
கைதட்டுகளை பெற்று பெரிய காரில் ஏறியவர்
வந்து சிக்னலில் நின்றபோது ...
விளையாட்டை மறந்து பொம்மை விற்கும் சிறுவனையும்...
பச்சை குழந்தையை காட்டி பிச்சை எடுக்கும் பெண்ணையும்...
படிக்க வசதி இல்லாமல் புத்தகம் விற்கும் வாலிபனையும்...
சில மூன்றாம் பால் இனத்தவரையும் பார்த்தப்பின்...
தன் முகத்தை சுளித்துக்கொண்டு
கார் என்னும் சவ பெட்டியின் ஜன்னலை மூட தொடங்கினார்
மனிதத்தை கொன்று புதைத்துவிட்டு ...

சேது