அஹா! என்றும் இல்லாத ஒரு தைரியம்
அவளை நேருக்கு நேர் பார்த்து
என் விருப்பத்தை சொன்னேன்...
பதிலாய் சிறு புன்னகை செய்தாள்...
இதை உறுதி செய்ய ரோஜா
என்னிடம் இருந்து அவளுக்கு கைமாற..
வழக்கம்போல் அந்த நிலநடுக்கம்....
சிறகு முளைத்தது அவளுக்கு
பறந்து சென்றாள் செவிடாய்...
பார்த்து நின்றேன் ஊமையாய்...
எங்கிருதோ ஒரு குரல்...
மெதுவாக கேக்க தொடங்கியது...
அது தெய்வமா..!!!
அதைவிட பெரிய சக்தியா..!!!
சற்று உற்று கவனித்தேன்...
அது என்னோட ரூம்மேட்தான்.....
"டே எந்திரிஞ்சு தொலைடா...மணி ஏழு ஆச்சு...
உன்னோட ஆபீஸ் வண்டி போயிருக்கும்..."
வழக்கம்போல் எனக்குள் ஒரு சிரிப்பு....
கனவு நிஜமாக வேண்டும் என்று
எழுப்பிவிட்டானோ என் நண்பன்!
நண்பென் டா !!!
No comments:
Post a Comment