Thursday, August 4, 2011

என் பேருந்து பயணம்!!!!


அந்த அழகிய மாலை பொழுதில் நின்றிருதேன் பேருந்துக்காக...
எப்போதும் போல் அன்றும் வந்தது தாமதமாக...
பேருந்தில் ஏறியவுடன் உன்னை தேடியது என் கண்கள்...
கூட்டத்தில் முயன்று தோற்றுபோனேன் வர உன் அருகில்...
உன்னை பார்த்தபடியே சில நொடி பயணம்...
சிறிது நேரத்தில் நீயே வந்தாய் என் வண்ணம்...
என்னிடம் இருப்பதை கொடுத்தேன் உன்னிடம் தயக்கத்துடன்...
வழக்கம் போல் முறைத்தாய் என்னை கோபத்துடன்...
நீ தந்ததை வாங்கிகொண்டு படித்தேன் அமைதியாய்...
எதிர்ப்பார்த்தேன் மீண்டும் எப்போது வருவாய் என...
உன்னை பார்க்கும் போதெல்லாம் நானும் கேட்டேன்...
முறைத்தாய்..மீண்டும் கேட்டேன் உன் பதிலே இல்லை...
நான் இறங்கும் இடம் வந்தும் உனக்கு இரக்கமும் இல்லை...
நீ தந்ததை கொண்டு இறங்கினேன் வருத்துடன்...
மறுபடியும் படித்தேன் உருக்கத்துடன்...

*

*

*

*

*

*

"இரண்டு ரூபாய் பாக்கி"...
நடத்துனர் தராத சில்லறை பாக்கியால்...
சோகமானது என் பேருந்து பயணம் !!!

**
சேது **

1 comment: